உங்களை வாழவைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? விஜய்சேதுபதிக்கு பிரபல இயக்குனர் கேள்வி!

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களும், வெளிநாட்டுவாழ் தமிழர்களும் ஒரு சில திரையுலக பிரபலங்களும் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி வருகின்றனர்

இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் தாமரை, உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும், வேல்முருகன் உள்ளிட்ட ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’உங்களை வாழ வைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? என்ற கேள்வி எழுப்பியதோடு, உங்கள் நடிப்பு தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது, எனவே இந்த படத்தில் நடிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் சகோதரா’ என்று அறிவுரை கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.

More News

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்: கமல்ஹாசன் புகழாரம்

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவு பெற்று தற்போது மூன்றாவது ஆண்டு நடைபெற்று வருகிறது.

அரசியல் ஆக்கப்படுகிறது: '800' திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா எண்ட்ரி: களைகட்டபோகுதா விளையாட்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும்

கொரோனா பாதிப்பால் காது கேட்காமல் போகுமா??? பதற வைக்கும் புதுத்தகவல்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது

தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரன் முடிவுக்கு வந்திருப்பார்: விஜய்சேதுபதிக்கு கடிதம் எழுதிய பிரபலம்!

பெண் கவிஞர் தாமரை விஜய்சேதுபதிக்கு இதுகுறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது