கக்கன் - சிவாஜி கணேசன் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் சேரன்
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
முன்னாள் அமைச்சர் கக்கன் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது எளிமை தான். எளிமையின் வடிவமாக இருந்த கக்கன் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கக்கன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர்களது மலரும் நினைவுகளை இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இன்று கக்கன் அய்யாவின் பிறந்தநாள் காமராஜர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்.. அந்த சமயத்தில் கட்சி கூட்டம் காலை 10 மணிக்கு எல்லோரும் வந்தாச்சு.. தலைவர் வரவில்லை 10 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.. எல்லோரும் காரணம் கேட்கும் முன்னரே பஸ் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும் என கைகுப்பி கக்கன் வருத்தம் தெரிவிக்க அருகிலிருந்து அய்யா சிவாஜிகணேசன் அவர்கள் மெதுவாக கக்கனிடம் பெரியவர்( காமராஜர்) 10 நிமிடம் முன்னாடியே வந்தாச்சு என சொல்லி இனிமேல் தாமதமாக வருவது தலைவனுக்கு அழகல்ல என்று சொன்னதோடு நில்லாமல் உடனே டிவிஎஸ் கம்பெனிக்கு சென்று ஒரு அம்பாசடர் கார் வாங்கி கொடுத்திருக்கிறார் சிவாஜி அவர்கள்.
நான் தனி ஆள் எனக்கு கார் ஓட்ட தெரியாது. தினமும் பெட்ரோல் போட பணமில்லை என காரை ஏற்க மறுத்திருக்கிறார் கக்கன் அய்யா. சிவாஜி இது கக்கனுக்காக அல்ல, காங்கிரஸ் தலைவனுக்கு.. அவர் தாமதமாக வருவது தவறான உதாரணம் என எடுத்துச்சொல்லி கக்கனை சம்மதிக்க வைத்து காருக்கான டிரைவர் முதல் அனைத்து செலவுகளையும் சிவாஜி அவர்கள் ஏற்றிருக்கிறார்.. மூன்று வருடங்களில் பதவி காலம் முடிந்து வேறு ஒருவர் தலைவராக சிவாஜி வீட்டில் அந்த கார் நிற்கிறது. சிவாஜி கேட்க கக்கன் அய்யா அது தலைவருக்கு கொடுத்த கார். இப்போதான் நான் தலைவர் இல்லையே எனக்கெதுக்கு கார் என தெரிவித்தாராம் போலீஸ் மந்திரியாக இருந்த கக்கன் அய்யா
எப்படி தூய்மையாக அரசியல் செய்திருக்கிறார்கள் பாருங்கள். அதனால் தான் அன்று ’தேசியகீதம்’ படம் எடுக்க முனைந்தேன். கக்கன் அய்யாவை நினைவு கொள்வோம் இளைஞர்களே... நன்றி.
சேரனின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
இன்று கக்கன் அய்யாவின் பிறந்தநாள் காமராஜர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர்.. காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்.. அந்த சமயத்தில் கட்சி கூட்டம் காலை 10 மணிக்கு.. எல்லோரும் வந்தாச்சு.. தலைவர் வரவில்லை.. 10 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.. எல்லோரும் காரணம் கேட்கும் முன்னரே pic.twitter.com/A7ucvnZgpa
— Cheran (@directorcheran) June 18, 2020
சென்று ஒரு அம்பாசடர் கார் வாங்கி கொடுத்திருக்கிறார் சிவாஜி அவர்கள். நான் தனி ஆள் எனக்கு கார் ஓட்ட தெரியாது. தினமும் பெட்ரோல் போட பணமில்லை என காரை ஏற்க மறுத்திருக்கிறார் கக்கன் அய்யா. சிவாஜி இது கக்கனுக்காக அல்ல காங்கிரஸ் தலைவனுக்கு.. அவர் தாமதமாக வருவது தவறான உதாரணம்
— Cheran (@directorcheran) June 18, 2020
இப்போதான் நான் தலைவர் இல்லையே எனக்கெதுக்கு கார் என தெரிவித்தாராம் போலீஸ் மந்திரியாக இருந்த கக்கன் அய்யா... எப்படி தூய்மையாக அரசியல் செய்திருக்கிறார்கள் பாருங்கள்.. அதனால் தான் அன்று தேசியகீதம் படம் எடுக்க முனைந்தேன்.. கக்கன் அய்யாவை நினைவு கொள்வோம் இளைஞர்களே... நன்றி.
— Cheran (@directorcheran) June 18, 2020