கமல், சீமான் கட்சிகள் இருபெரும் சக்தியாக உருவெடுக்கும்: பிரபல இயக்குனர்

அதிமுக, திமுக மீது கடந்த பல ஆண்டுகளாக அதிருப்தியில் இருக்கும் தமிழக மக்களின் ஒருபிரிவினர் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுக்கட்சிகளுக்காக ஏங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வகை மக்களின் நம்பிக்கையை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்விரு கட்சிகளும் இன்னும் சில ஆண்டுகள் தமிழக அரசியலில் தாக்குப்பிடித்தால் நிச்சயம் ஒரு பெரும் சக்தியாக உருவாகும் என்றே கணிக்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த இரு கட்சிகள் குறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது: மநீம 16.5 லட்சம், நாம் தமிழர் 16.0 லட்சம் ஓட்டுக்கள் வாங்கி 32.5 லட்சம் மக்கள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்கள். 39 தொகுதிகளில் 27 இடங்களில் நாம்தமிழர் கட்சி மநீமவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 12 இடங்களில் மநீம அதிக வாக்குகள் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்

திமுகவும் அதிமுகவும் மக்களுக்கான பணியாற்றுவதிலும் சிறப்பாக செயல்படாமல் முன்னர் போலவே இருந்தால் நாம் தமிழரும் மநீமவும் இருபெரும் சக்திகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருபெரும் கட்சிகளை எதிர்த்து தைரியமாக களத்தில் இறங்கி தனியே நின்று மாற்றத்திற்கு வித்திட்டவர்களை வாழ்த்துவோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திமுக கூட்டணியின் 38 எம்பிக்களில் 12 பேர் போராளிகளாக சிந்தனையாளர்களாக, சமூக அக்கறையுடைவர்களாக, புதியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் செயல்படுவதை பொறுத்து திமுக கூட்டணி தன் பலத்தை இன்னும் பெருக்கிகொள்ள வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்

இவ்வாறு இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More News

தேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி: 

அரசியல்வாதிகள் ஐந்து வருடங்கள் செய்யும் அட்டகாசங்களை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து, தங்களுடைய முழு கோபத்தையும் ஒட்டு மொத்தமாக காட்டும் நாள் தான் தேர்தல் நாள்.

பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னையின் மூன்று தொகுதிகள்

பிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் உதவி இல்லாமலேயே

வாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு அரசியல்வாதிகள் உருவாகி வருவது தெரிந்ததே.

யோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்மபிரபு