வருத்தம் தெரிவித்தால் பிரச்சனை முடிந்துவிடும்: 'ஜெய்பீம்' குறித்து சேரன் கருத்து!
- IndiaGlitz, [Saturday,November 20 2021]
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒட்டுமொத்த திரையுலகமும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தன என்பதும் சீமான், சந்தானம் போன்றவர்கள் மட்டும் நடுநிலை கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ‘ஜெய்பீம்’ விவகாரம் குறித்து சேரன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சேரன் கூறியிருப்பதாவது: படம் உருவாக்கத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் உருவாகவில்லை. போலீஸ் அதிகாரியின் பெயர் மாற்றப்பட்டதும், முக்கிய கதாபாத்திரங்களின் உண்மை பெயர் அப்படியே இருப்பதுமே எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாம் நிற்க காரணம்.. அதற்கான பதிலை சொல்லிவிட்டு வருத்தம் தெரிவித்தால் தீர்ந்துவிடும்’ என்று கூறியிருந்தார்.
சேரனின் இந்த கருத்துக்கு ஒருசிலர் ஆதரவும் பலர் கண்டனம் தெரிவித்தும் வரும் நிலையில் அதன்பிறகு அவர் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: என்னோட முந்தைய பதிவுல அதை தெளிவா சொல்லிருக்கேன்.. அது தெரியாம இங்க வந்து நம்ம மக்கள் எனக்கு சூப்பரா வசவு பாடிட்டு போறாங்க... ஹாஹா.. அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கவே செய்கிறேன்... என்னோட முந்தைய பதிவுகளை பாருங்க’ என்று தெரிவித்துள்ளார்.
இதான் உண்மையான கெத்து.. சிவப்பு சிந்தனைக்காரனுக்கெல்லாம் ஜாதி என்பது இல்லை.. ஜாதி பார்த்தும் இயங்குவது இல்லை.. எங்க ஊர்ல ராமலிங்கம் அய்யான்னு ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார்.. அவரும் இதையேதான் சொன்னார்.. செய்தார்.. மனிதனுக்கு மனிதன் உதவ அவனுக்காக போராட ஜாதி தெரியவேண்டிய அவசியம் இல்லை. https://t.co/GXA1qWVyVQ
— Cheran (@directorcheran) November 19, 2021
https://t.co/Ev8GjQTjAE
— Cheran (@directorcheran) November 19, 2021
இதைப்படிச்சிட்டு பேசுங்க.. பதிவு போடுங்க ..