விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படத்தின் பலம், பலவீனம் என்ன? இயக்குனர் சேரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கிய ‘க/பெ ரணசிங்கம்’திரைப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸான நிலையில் இந்த படத்தை பார்த்த பெரும்பாலானோர் பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு தேசிய விருது பெற வாய்ப்பு உள்ள அளவிற்கு இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ படம் குறித்து இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மண்ணையும் மக்களின் முக உணர்வுகளையும் அச்சு அசலாக பதிவு செய்ததில் விருமாண்டி இயக்குனரும், மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் தம்பி சண்முகமும் அசுர வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதி இருவரின் முகமும் இதுவரை நினைவில்...
எடுத்துக்கொண்ட கதையும் களமும் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசுவதால் தவிர்க்க இயலாத படமாக என்றும் நிற்கும். படத்தின் இறுதிக்காட்சிதான் முகத்தில் அறைகிறது.. மக்களை திசைதிருப்ப அரசியல் எதுவேண்டுமானலும் செய்யும் என சொல்கிறது.. அதுவே படத்தின் பலம்.. நீளம் அதிகம் என்பது பலவீனம்’ என்று சேரன் தெரிவித்துள்ளார்.
மண்ணையும் மக்களின் முக உணர்வுகளையும் அச்சு அசலாக பதிவு செய்ததில் @pkvirumandi1 இயக்குனரும், மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் தம்பி @shan_dir சண்முகமும் அசுர வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.. @aishu_dil @VijaySethuOffl இருவரின் முகமும் இதுவரை நினைவில்... pic.twitter.com/Nj9CGejvWM
— Cheran (@directorcheran) October 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com