இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததை நினைத்தால் அருவருப்பு ஏற்படுகிறது. சேரன்
Friday, August 26, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் தியா இயக்கிய 'கன்னா பின்னா' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் சேரன் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் சேரன், 'ஒரு திரைப்படத்தை ஆடியன்ஸ் 5 ஆயிரமோ அல்லது 10ஆயிரமோ கொடுத்து பார்க்க போவதில்லை. வெறும் ரூ.120 கொடுத்து திரையரங்கில் பார்த்தால் ஆயிரக்கணக்கான திரையுலக நண்பர்கள் பலனடைவார்கள்
மேலும் புதுப்படங்களை உடனடியாக வெப்சைட்டில் வெளியிடும் ஒருசில இணையதள உரிமையாளர்களுக்கு இதயமே இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. யாரோ உழைத்த உழைப்பை சுரண்டு இவர்களை தண்டிக்க சரியான சட்டமும் நம்மிடம் இல்லை.
பெரும்பாலும் இதுபோன்ற வெப்சைட்டை வைத்திருப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக எங்களுடைய திரையுலகம் எவ்வளவு போராட்டம் நடத்தியுள்ளது, தியாகம் செய்துள்ளது, அப்படிப்பட்ட திரையுலகத்திற்கு இலங்கையில் உள்ள ஒருசில தமிழ் நண்பர்கள் துரோகம் செய்வது குறித்து யோசித்தால் இவர்களுக்காக செய்த போராட்டத்தை நினைத்தால் அருவருப்புதான் வருகிறது.' இவ்வாறு சேரன் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments