தமிழக முதல்வருக்கு பாரதிராஜா எழுதிய முக்கிய கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நேற்று அனுமதி அளித்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது போன்று திரைப்பட படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
வணக்கம் முதல்வர் அவர்களுக்கு,
படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்
அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.
சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் அவர்கள் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல
ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com