தமிழக முதல்வருக்கு பாரதிராஜா எழுதிய முக்கிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நேற்று அனுமதி அளித்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது போன்று திரைப்பட படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம்‌ முதல்வர்‌ அவர்களுக்கு,

படிப்படியாக மக்களின்‌ அன்றாட வாழ்வை மீட்டுக்‌ கொண்டிருக்கும்‌ சிறப்பு மிகுந்த பணிக்கும்‌, அயரா உழைப்பிற்கும்‌ பாராட்டுக்கள்‌. விதிகள்‌ தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர்‌ கொண்ட குழு கலந்து கொள்ளலாம்‌ என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்‌

அதேசமயம்‌ சினிமாவும்‌ முடங்கிப்போய்‌ கிடக்கிறது திரையரங்குகள்‌, விநியோகஸ்தர்கள்‌, தொழிலாளர்கள்‌ என அனைவரும்‌ அடுத்த நிலை என்ன எனத்‌ திணறி வருகிறோம்‌. பலர்‌ உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள்‌ முதலீடு செய்த தயாரிப்பாளர்கள்‌ வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர்‌. பணம்‌ கொடுத்தவர்களும்‌ போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால்‌ நஷ்டப்பட்டுப்‌ போய்‌ உள்ளனர்‌.

சினிமாவை நசிந்துவிடாமல்‌ காக்க வேண்டிய நிலையில்‌ உள்ளோம்‌. முதல்வர்‌ அவர்கள்‌ தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப்‌ போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும்‌ படப்பிடிப்பைத்‌ தொடங்க கொடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌. அரசு வரையறுக்கும்‌ கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன்‌ இயங்குவோம்‌ என உறுதியளிக்கிறோம்‌. இதன்மூலம்‌ சிறுபடங்கள்‌ படப்பிடிப்பிற்குச்‌ செல்ல
ஏதுவாக அமையும்‌. திரையரங்குகளும்‌ தங்களின்‌ வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறேன்‌.

இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

More News

திருமணத்திற்கு 50, துக்கத்திற்கு 20, படப்பிடிப்புக்கு மட்டும் 60ஆ? கஸ்தூரி கேள்வி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள், 600க்கும் மேற்பட்டவர்கள் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது

14 வயதில் நடந்த அந்த சம்பவம்: நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த ஷ்ராதா ஸ்ரீநாத்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷ்ராதா ஸ்ரீநாத்.

போக்குவரத்து தொடக்கம், இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசின் தளர்வுகள் அறிவிப்பு

ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் நிலையில் இந்த ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்து மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

கொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவை

உலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...

வரலாற்றில் நிகழ்ந்த 100 வருடப் போரைப் பற்றி கேள்விபட்டு இருப்போம். பிரான்ஸ், இங்கிலாந்துக்கு எதிராக கிட்டத்தட்ட 116 ஆண்டுகள் கடுமையான வாரிசு போரை நடத்தியது.