close
Choose your channels

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா: வைரமுத்து டுவிட்!

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி திரையுலகினர் சிலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, வடிவேலு உள்பட ஒருசிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து பாரதிராஜா விரைவில் குணமாக வேண்டும் என அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நோய் என்பது
உடல் தேடிக்கொள்ளும்
ஓய்வு

எதிர்ப்பாற்றலைப்
பெருக்கிக் கொள்ளும்
உடம்பின் தந்திரம்

மனநிலை உடல்நிலை
இரண்டுக்கும்
சமநிலை காணும்
இயற்கையின் ஏற்பாடு

கொரோனா கண்டிருக்கும்
அண்ணன் வைகோ
இயக்குநர் பாரதிராஜா

விரைவில்
நலம்பெறவும் வலம்வரவும்
வாழ்த்துகிறேன்

அதேபோல் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இது குறித்து கூறியிருப்பதாவது

காலத்தின் நாயகர்களே
விரைந்து வருக

இருவரோடும்
பழகுவதற்கு பாக்கியம்
பெற்றவனின் அழைப்பு இது.

நீங்கள் தந்த
ஊக்கமதை
ஒருக்காலும் மறவேன்.

'கலிங்கப்பட்டியின் சிங்கம்'
தலைவர் வைகோ அவர்களும்

என் 'தென்கிழக்குச்சீமை'
இயக்குனர் பாரதிராஜா அவர்களும்

தொற்று நீங்கி நலமாக
விரும்புகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment