பாரதிராஜா வீட்டில் ஒட்டப்பட்ட 'தனிமைத்துதல்' ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனா வைரசுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் அவர்கள் தங்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்ற போதிலும் அவர் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது
இதனை உறுதி செய்யும் வகையில் பாரதிராஜாவின் தேனி வீட்டில் ’தனிமைப்படுத்துதல்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments