பாரதிராஜா வீட்டில் ஒட்டப்பட்ட 'தனிமைத்துதல்' ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு

தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனா வைரசுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் அவர்கள் தங்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்ற போதிலும் அவர் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது

இதனை உறுதி செய்யும் வகையில் பாரதிராஜாவின் தேனி வீட்டில் ’தனிமைப்படுத்துதல்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளை திறக்கலாம் என்று அரசு சில தளர்வுகளை அறிவித்து இருந்தது.

ஒரு நாடாகவே அங்கீகரிக்கப்படாத தைவான் கொரோனாவுக்கு எதிராக சாதித்தது எப்படி!!!

கொரோனா வைரஸ் பரவலைத் திறமையாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக தைவானும் இருந்து வருகிறது.

இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டீங்களா முதல்வரே? மீராமிதுன் புகார்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது தெரிந்ததே. அதேபோல் மீராமிதுனை ஆபாசமாக சித்தரிக்கும் நெட்டிசன்களின் கூட்டமும் அதிகம் உண்டு

இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 527 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இன்றும் 500க்கும் மேற்பட்டோர்

கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் மரணம்

நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து தவிர சாலைகளில் கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.