வெறும் இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினி! யாரிடம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்கும் என்றால் பல கோடிகளை கொட்டி கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கும் நிலையில் வெறும் இரண்டே இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஒரு படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ரஜினிக்கு இரண்டு ரூபாய் கொடுத்து கால்ஷீட் பெற்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய பாரதிராஜா, 'நான் எப்போதும் பெரிய ஸ்டார்களை வைத்து படமெடுக்க விரும்புவதில்லை. குடிசை தொழில் மாதிரி அறிமுக நடிகர், நடிகைகளை மட்டுமே வைத்து படமெடுப்பேன். பெரிய ஸ்டார்களுடன் இணைந்து படமெடுத்தால் என்னுடைய தனித்தன்மையை இழந்துவிடுவேனோ என்ற பயமும் ஒரு காரணம்
இந்த நிலையில்தான் ஜி.எம்.குமாரும், லிவிங்ஸ்டனும் ஒரு கதை சொன்னார்கள். அந்த கதை எனக்கு பிடித்திருந்ததால் ரஜினியிடம் போய் அந்த கதையை கூறும்படி சொன்னேன். 16 வயதினிலேயே படத்திற்கு பின்னர் அவருடைய வளர்ச்சி அபாரமாக இருந்தது. இருந்தாலும் அவரிடம் சில விழாக்களில் பார்த்து சிரிப்பது, பேசுவது ஆகியவை இருக்குமேயன்றி எனக்கு படம் நடித்து கொடுங்கள் என்று நான் கேட்டது இல்லை.
இந்த நிலையில்தான் இந்த கதையை கேட்டு என்னிடம் பேசிய ரஜினி, 'கதை சூப்பர், நாம ரெண்டு பேரும் இந்த படத்துல வொர்க் பண்றோம். நீங்க தான் இயக்குனர் என்று கூறினார். ரஜினியின் சம்மதம் கிடைத்துவிட்டதை அறிந்து என்னை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போதே எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கு போட்டனர்.
ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதாலும், பெரிய சம்பளம் வாங்குபவர் என்பதாலும் அன்றைய காலகட்டத்தில் ரூ.10 லட்சம் எடுத்து கொண்டு அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க சென்றேன். பணப்பெட்டியை பார்த்ததும் உடனே அதை ஒதுக்கி வைத்துவிட்ட ரஜினி, உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதில் ஒரு நூறு ரூபாய், ஒரு ஐம்பது ரூபாய் மற்றும் ஒரு இரண்டு ரூபாய் இருந்தது. அந்த இரண்டு ரூபாயை மட்டும் அட்வான்ஸாக பெற்று கொண்டு அந்த படத்தில் நடித்தார். படம் முடிந்த பின்னர்தான் அவருடைய சம்பளம் செட்டில் செய்யப்பட்டது' என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்
ஒருசில நடிகர்கள் பணத்தை செட்டில் செய்தால்தான் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க வருவேன் என்று கூறுபவர்கள் மத்தியில் ரஜினி இரண்டு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு நடித்த விஷயம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் பாரதிராஜா தெரிவித்தார். அதனால் தான் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக உள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments