படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்த அறிமுக இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

அறிமுக இயக்குனர் ஒருவர் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் திடீரென எதிர்பாராத வகையில் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இயக்குனர் பாலமித்ரன் என்பவர் ஒரு சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது ’உடுக்கை’ என்ற திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக இயக்கி வந்தார். இந்த படத்தில் விபின், சஞ்சனா சிங், அங்கிதா, மொட்டை ராஜேந்தரின், மயில் சாமி உள்பட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதம் இருந்ததாகவும் இதனை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென இயக்குனர் பாலமித்ரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் படக்குழுவினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மறைந்த இயக்குனர் பாலமித்ரனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்

திரையுலகில் போராடி வாய்ப்பு பெற்று முதல் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்தின் இயக்குனர் உயிரிழந்தது கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

கொரோனா வார்டில் ஒரு கிளுகிளுப்பான காதல்: நர்ஸ்கள், டாக்டர்கள் அதிர்ச்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் காதல்

அடுத்த படத்தின் டப்பிங்கை தொடங்குகிறார் சீயான் விக்ரம்

விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும், அஜய் ஞானமுத்து இயக்கிவரும் 'கோப்ரா' திரைப்படமும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விக்ரம் நடிக்கும் ஹிந்தி படம் குறித்த மாஸ் தகவல்

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் கூட பாலிவுட்டில் ஹிந்தி திரைப்படங்களில் ஜொலிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி குறித்த ஆச்சரியமான தகவல்

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.