கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Tuesday,December 08 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் பாலாஜி தரணிதரன். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து அவருடைய அடுத்த படமான ’சீதக்காதி’ என்ற படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பாலாஜி தரணிதரன் இயக்கிய திரைப்படம் ’ஒரு பக்க கதை’. காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் அதாவது டிசம்பர் 25ல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷனும் தற்போது தொடங்கிவிட்டது

கோவிந்த் வசந்தா இசையில், பிரேம்குமார் ஒளிப்பதிவில் அந்தோனி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை வாசன் விஷூவல் வெண்ட்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

More News

ஓடிடியில் வெளியாகிறதா விஜய் சேதுபதியின் அடுத்த படம்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படத்திற்கு விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும்

பா ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ மற்றும் டைட்டில் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் 'சார்பேட்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும்

2020ல் விஜய்யின் செல்பி செய்த சாதனை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ரிலீஸ் பணிகளை படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்

சிம்புவின் ஸ்டைலிஷ் புதிய லுக்: ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அவர் தற்போது 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்

இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி: தொழிலதிபர் மாப்பிள்ளை!

பிரபல தமிழ் தெலுங்கு திரைப்பட பாடகி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வது ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது