தனுஷூக்கு பதிலாக சித்தார்த்தை தேர்வு செய்த பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

தனுஷ் நடித்த இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் மூன்றாவதாக தனுஷை வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது சித்தார்த் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்த ’மாரி’ ’மாரி 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவார் என செய்தி வெளியான நிலையில் தனுஷ் தற்போது பிசியாக இருப்பதால் அதற்கு முன் சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார் என்பதும், தற்போது மீண்டும் பாலாஜி மோகனுடன் சித்தார்த் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சித்தார்த் தற்போது ’மகாசமுத்திரம்’ ’சைத்தான் கே பச்சா’ ’டக்கர்’ மற்றும் ’இந்தியன் 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஆபாசப்படம் காண்பித்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.....! பாஜக நிர்வாகி அதிரடி கைது....!

ஆபாசப்படத்தை காண்பித்து சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு செய்த, பாஜக நிர்வாகி மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

மகனாக விரல் பிடித்த அப்பா: நனவானது சிவகார்த்திகேயனின் 18 வருட கனவு!

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 18 வயது கனவு நனவானது என தனது மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளின் கண்ணை குருடாக்கும் செல்போன்…. ஆன்லைன் வகுப்புகளை சமாளிப்பது எப்படி?

கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த கல்வி முறையே மாறி இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அனைத்துப் பள்ளி வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன

ஒன்று கூடிய 80களின் நாயகிகள்: யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று கூடி மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்த அனுபவம் குறித்த புகைப்படங்களை நடிகை ராதிகா

சர்ஜரிக்கு பின் எப்படி இருக்கின்றார் அர்ச்சனா: மகளின் அப்டேட்

நடிகையும், தொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான அர்ச்சனா சமீபத்தில் தனக்கு மூளை அருகில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அறுவை சிகிச்சை சிகிச்சை செய்துகொள்ள