இந்த சந்திப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாதது: அருவி அதிதிபாலன்

  • IndiaGlitz, [Friday,January 12 2018]

புதுமுக நடிகை அதிதிபாலன் நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'அருவி' திரைப்படம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என அனைத்து ஊடகங்களும் பாராட்டுக்கள் தெரிவித்தன. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் முதல் அனைத்து தரப்பினர்களும் படக்குழுவினர்களை குறிப்பாக நாயகி அதிதிபாலனுக்கு பாராட்டு தெரிவித்தனர்

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா அவர்களும் தற்போது அதிதிபாலன் உள்பட அருவி படக்குழுவினர்களை  நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்த் அதிதிபாலன் தனது சமூகவலைத்தளத்தில், 'என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பெரிய இயக்குநரின் வாழ்த்தைப் பெற என்ன தவம் செய்தேன்.! இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா சார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் அருண்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் 'பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே நின் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற! என்று கூறியுள்ளார்.

More News

அஜித், சூர்யாவை சந்தித்த பிரபல விளையாட்டு வீராங்கனை

தல அஜித் குறித்த சின்ன செய்தி வெளியானாலும் அது சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையே.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இலவச வேன் வசதி செய்து கொடுத்த ரஜினி ரசிகர்கள்

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் என்று எட்டாவது நாளாக நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த 8 நாள்களிலும் அலுவலகம் செல்பவர்கள் பெரும் அவதியடைந்தனர்

ராம்கோபால் வர்மாவின் GST படத்தில் நிர்வாண காட்சிகள்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் திரைப்படங்களும் சமூக வலைத்தள பதிவுகளும் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டிலும்,

மற்றவர்களை விட ஆண்டாளை அதிகம் நேசிப்பவர் வைரமுத்து: பிரபல இயக்குனர்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்

பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

பொங்கல் உள்பட விழா காலங்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.