'வணங்கான்' பிரச்சனை குறித்து மனம் திறந்த பாலா.. என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’வணங்கான்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா பிஸியாகி விட்டதால் இந்த படத்தை முடித்த பின்னர்தான் அவர் ’வணங்கான்’ படத்திற்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. மேலும் சூர்யா மற்றும் பாலா இடையே பிரச்சினை என்ற வதந்திகளும் சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் நேற்று இயக்குனர் பாலா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த போது அவரிடம் செய்தியாளர்கள், ’வணங்கான்’ படம் என்ன ஆனது? உங்களுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.
அனைத்து கேள்விகளுக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக கூறிய பாலா ’உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? ஒன்றுமில்லை’ என்று கூறினார். அதன் பிறகு சூர்யா நடிக்கும் ’வணங்கான்’ படம் நன்றாக வந்து கொண்டிருக்கின்றது என்றும் இதுவரை எடுத்த காட்சிகள் நன்றாக உள்ளது என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்' என்றும் அவர் கூறினார்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், சூர்யாவின் தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Vanangaan Update..????
— Laxmi Kanth (@iammoviebuff007) November 17, 2022
Anchor: Vanangaan epdi vandhruku?
Bala: Vandhruku ila vandhutu iruku..??
Anchor: Edho Problem aame..??
Bala: Ama ungalukum enakum dha..??
Thug life..⭐pic.twitter.com/diZHkSxgcJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments