பாலாவின் அடுத்த படத்தின் திட்டம் இதுதான்

  • IndiaGlitz, [Friday,May 27 2016]

சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கனவுப்படமான 'குற்றப்பரம்பரை' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்தினார் என்பதை பார்த்தோம். 'குற்றப்பரம்பரை சட்ட வரலாற்றை மையமாகக் கொண்ட மற்றொரு படத்தை பிரபல இயக்குனர் பாலாவும் இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்து இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் பாலா வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கவுள்ளதாகவும் குறிப்பாக அரவிந்தசாமி, விஷால், ஆர்யா, ராணா, அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'குற்றப்பத்திரிகை' படத்திற்கு பூஜை போட்டுள்ள பாரதிராஜா விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலாவும் ஜனவரி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக களமிறங்குகிறார் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக நாசர் தலைமையிலான இளைய தலைமுறை நிர்வாகிகள் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம்...

'தல 57' குறித்து அனிருத்தின் முக்கிய அறிவிப்பு

'வேதாளம்' வெற்றி படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 57' படத்தையும் 'வேதாளம்' இயக்குனர் சிவா இயக்கவுள்ளார்...

சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் விஜய்?

விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக எழில் இயக்கிய 'துள்ளாத மனமும் துள்ளும்' என்ற படம் இடம் பெறும்...

சுந்தர் சியின் 'முத்தின கத்தரிக்கா' சென்சார் தகவல்கள்

சுந்தர் சி நடிப்பில் அவருடைய உதவியாளர் இயக்கிய 'முத்தின கத்திரிக்கா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

அட்லி-கார்த்தி இணைப்பு குறித்த முக்கிய தகவல்

அட்லியின் முதல் படத்தில் ஆர்யாவும், இரண்டாவது படத்தில் இளையதளபதி விஜய்யும் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றி பெற்றதால்...