தேசிய விருது இயக்குனருடன் முதல்முறையாக இணையும் சிம்பு?

  • IndiaGlitz, [Sunday,December 04 2016]

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரூபாய் நோட்டு பிரச்சனையையும் தாண்டி நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் 'பிரேமம்' புகழ் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பாலா தற்போது சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் உள்ளதாகவும், இந்த பணி முடிந்தவுடன் அடுத்த வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. பாலாவுடன் சிம்பு முதன்முறையாக இணையும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More News

பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட 'ரெமோ' ரீமேக் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது...

'2.0' படப்பிடிப்பில் விபத்து. ரஜினிக்கு காயம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள விஐடி வளாகத்தில் நடைபெற்று வருகிறது...

ஜன் தன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை கொடுக்க வேண்டாம். பிரதமர் மோடி அதிரடி

அரசு கொடுக்கும் மானியங்கள் ஏழைகளுக்கு நேரடியாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜன தன் வங்கி கணக்கு...

நீதிமன்றத்தில் நடிகை ரம்பா தாக்கல் செய்த புதிய மனு

'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த நடிகை ரம்பா, கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் இந்திரகுமார்...

என் மகளின் படிப்புக்கு கேட்காமலே உதவியவர் அஜித். பிரபல நடிகர்

தல என்று அனைவரும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் அஜித், ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதநேயமும் உள்ளவர்...