மனித நாகரிகத்தின் உச்சம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து ஒட்டு மொத்த திரையுலகினர்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான பாலா அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம், நன்றிகள்! என்று கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் பாலா அவர்கள் திருக்குறள் ஒன்றையும் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த திருக்குறள் இதுதான்:

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி

இந்த திருக்குறளுக்கு ’உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்’ என்பது பொருளாகும்.