'விஜய் 59' இயக்குனரின் அடுத்த புதிய முயற்சி

  • IndiaGlitz, [Saturday,September 05 2015]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து அதன்பின்னர் 'ராஜா ராணி' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு, இரண்டாவது படமே இளையதளபதி விஜய்யை இயக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பிற்கே கோலிவுட் திரையுலகம் அவரை ஆச்சரிய பார்வை பார்த்த நிலையில் தற்போது அட்லி, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அட்லி தொடங்கவுள்ள புதிய தயாரிப்பு நிறுவனமும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த ஐசக் என்பவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அட்லி தற்போது இயக்கி வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.