close
Choose your channels

இதுதான் அட்லியின் நான்காவது படம்.

Saturday, June 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜா ராணி' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி அடுத்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை இயக்கி வெற்றி பட இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றார். அட்லி இயக்கும் அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு செய்திகள் உலவி வருகிறது.

இந்நிலையில் அட்லி 'ஏ பார் ஆப்பிள்' என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'சங்கிலி புங்கிலி கதவை தொற' என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்து வரும் இந்த படம் அட்லியின் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அட்லியின் நான்காவது படம் குறித்த தகவல் அதாவது அட்லி தயாரிக்கும் இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் 'நேரம்' நாயகன் நிவின்பாலி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது மஞ்சிமா கோகன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment