முதல்முறையாக 'தந்தையர் தினம்' கொண்டாடும் அட்லி.. க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 18ஆம் தேதி உலகம் முழுவதும் ’தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் தங்கள் தந்தையை போற்றி பதிவுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடும் இயக்குனர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் திரை உலகில் ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதன் பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்த அறிவிப்பை அட்லி மற்றும் பிரியா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன் அட்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையை கையில் ஏந்தி தந்தையர் தினம் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy happy Father’s Day dear DADA ❤️
— Priya Mohan (@priyaatlee) June 18, 2023
Meer , Becky and mumma loves you to the moon and back ❤️
Ur the best DADA in the whole world ❤️
Love youuuuuuuuuu 😘😘😘@Atlee_dir ❤️#meer #becky pic.twitter.com/LGwaIg9ePq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments