close
Choose your channels

'தெறி'யின் பாசிட்டிவ்கள் என்னென்ன? அட்லி விளக்கம்

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. இதில் இயக்குனர் அட்லி, எமிஜாக்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பிரஸ்மீட்டில் பேசிய இயக்குனர் அட்லி, 'தெறி' படத்தை விஜய் பார்த்து கதை கேட்டவுடன் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தாரோ அதே அளவுக்கு மகிழ்ச்சி அடைந்து 'சூப்பர்' என்று பாராட்டினார்.
மணிரத்னம் அவர்களுடன் என்னை ஒப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரத்தில் 'தெறி' படத்திற்கும் 'சத்ரியன்' படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை
சமந்தா இந்த படத்தில் டாக்டர் ரோலில் நடித்துள்ளார். அவருடைய சிறப்பான நடிப்பு எங்களுக்கு உற்சாகத்தை தந்தது.

'தெறி' படத்திற்காக இளையதளபதி பல ரிஸ்க்குகள் எடுத்து டூப் இன்றி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.
இண்டர்வெல் காட்சி இமோஷனலுடன் முடியும்
பெண்கள் பாதுகாப்பு உள்பட பல்வேறு சமூக கருத்துக்கள் இந்த படத்தில் அமைந்துள்ளது.
'தெறி' வெற்றியை பொறுத்தே இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராகும். ஆனாலும் 'தெறி 2' என் மனதில் இருக்கின்றது.
'தெறி' சிம்பிள் கதையாக இருந்தாலும் வலுவான திரைக்கதையுடன் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment