close
Choose your channels

'கபடி' களத்தில் குதிக்கும் பெண் இயக்குனர்

Wednesday, November 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகிய 'அம்மா கணக்கு' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை பெண் இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியிருந்தார்

'அம்மா கணக்கு' படம் கொடுத்த வெற்றியை அடுத்து தற்போது உற்சாகமாக இயக்குனர் அஸ்வினி ஐயர் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். தாய்-மகள் பாசத்தை கடந்த முறை கையில் எடுத்த அவர் இம்முறை விளையாட்டு களத்தில் குதிக்கவுள்ளார். அதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட்டு தான் அவருடைய அடுத்த படத்தின் களம்

கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு', உள்பட ஒருசில படங்கள் ஏற்கனவே கபடி விளையாட்டு குறித்து வெளிவந்திருக்கும் நிலையில் இன்னொரு திரைப்படமும் கபடி குறித்து பேசவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment