சிம்புவின் கெட்டப்பை மாற்ற ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கிய பொருட்கள்: பட்டியல் போட்ட இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய கெட்டப்பை மாற்றுவதற்காக சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கிய பொருட்களை பட்டியலிட்டு, இயக்குநர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், 'ஓ மை கடவுளே’, ’டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சிம்புவின் 49-வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் கலவையாக 90கள் கிட்ஸ்களின் மோடில் நடிக்க இருப்பதாக சிம்புவே தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று வெளியான போஸ்டரில் சிம்புவின் லுக் அட்டகாசமாக இருந்ததை அடுத்து, இந்த லுக்கை கொண்டு வர சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் சில பொருட்களை வாங்கியதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். அந்த பொருட்கள் இவைதான்:
1. ஸ்டார்
2. இதயம்/உடைந்த இதயம்
3. கரெக்ட் மச்சி
4. சைக்கிள் ஜெயின்
5. மணிக்கட்டை சுற்றிய கருப்பு கயிறு
6. ப்ளேடு
7. மெட்டல் மோதிரங்கள்
8. கைக்குட்டை சுற்றிய ஒற்றைக்கை
9. இசைக் குறியீடு
10. பச்சை மோதிரம்
11. மன்மதனே பாடல் வெள்ளை சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ்’
சிம்புவின் பழைய பாணியை இந்த படத்தில் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுவதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The list I made to bring back the vintage STR for the announcment poster. Thank you Spencer Plaza 😎 @SilambarasanTR_ pic.twitter.com/PgaIrtYyQt
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 22, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com