இயக்குனர் சங்க தேர்தல் திடீர் ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் ஜனவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடப்பதாக இருந்த சங்க தேர்தல் ஜனவரி 25ஆம் தேதி செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்படுகிறது என தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர் சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கள்கிழமை சென்னை திரும்புவது சிரமம் என்பதால் செவ்வாய்க்கிழமை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் அன்று வாக்களிக்க வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இல்லையேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், வாக்களிக்கும் இடத்தில் இடைவெளி கூடுதலாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் வேட்பாளர்களையும், வேட்பாளர்கள் வாக்காளர்களையும் கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை என்றும், கொரோனா வைரஸ் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து அமைதியான தேர்தலுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com