சிவகார்த்திகேயன் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் நடிகைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் மூலம் பெரும்புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர் அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி அருண்காமராஜ் இயக்கி வரும் இந்த படத்தை விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் தயாரித்து இருப்பது மிக பொருத்தமானதாக கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை பற்றி அதன் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் கூறும்போது, "இது எனக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கிறேன். . அடுத்தகட்ட படப்பிடிப்பில் தான் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக நடிகைகளும், கிரிக்கெட் ஆடும் பெண்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சவாலாக இருக்கும் அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறோம்.
திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங்கில், லால்குடி இளையராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்க, போஸ்டர்களை வடிவமைக்கிறார் வின்சி ராஜ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout