சிவகார்த்திகேயன் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் நடிகைகள்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் மூலம் பெரும்புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர் அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி அருண்காமராஜ் இயக்கி வரும் இந்த படத்தை விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட  சிவகார்த்திகேயன் தயாரித்து இருப்பது மிக பொருத்தமானதாக கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை பற்றி அதன் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் கூறும்போது, இது எனக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கிறேன். . அடுத்தகட்ட படப்பிடிப்பில் தான் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக நடிகைகளும், கிரிக்கெட் ஆடும் பெண்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சவாலாக இருக்கும் அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறோம்.

திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங்கில், லால்குடி இளையராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்க, போஸ்டர்களை வடிவமைக்கிறார் வின்சி ராஜ்.

More News

நான் வந்துட்டேன்னு சொல்லு: தமிழில் டுவீட் போட்ட பிரபல சிஎஸ்கே வீரர்

இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்துவிட்டால், தமிழ் ரசிகர்களின் பாசமழைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிந்ததே. இதற்கு நல்ல உதாரணம் தல தோனி

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்

ஜிவி பிரகாஷ் நடித்து வந்த குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் நடித்து வந்த 'சர்வம் தாள மையம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது

சென்னையில் தற்கொலைக்குக் முயன்ற இரண்டு காவலர்கள் கைது

நேற்று சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் ஆகிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்

ரஜினி பள்ளியில் மகளை படிக்க வைத்த கமல் டிரைவர்

கமல்ஹாசனிடம் சுமார் 12 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்த ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசனின் குணம், கவுதமியிடம் அவர் காட்டிய அன்பு, தனக்கு செய்த உதவி உள்பட பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்

சங்கத்தை மீறி படப்பிடிப்பு நடத்தும் விஜய்சேதுபதி! சலசலப்பில் தயாரிப்பாளர் சங்கம்

கோலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை, உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை