திரைப்படங்களில் வசனம் பேசுவதும், மேடையில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல.. விஜய் குறித்து பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

திரைப்படங்களில் வசனம் பேசுவதும், அரசியல் மேடைகளில் பேசுவதும் ஒன்றல்ல என பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் அரசியல் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

நயன்தாரா நடித்த ’அறம்’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் அரசியல் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆரம்பித்த கட்சியின் கொள்கை என்ன? வேலை திட்டம் என்ன? மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொண்டால் அவர்கள் தங்கள் கொள்கையாக பொதுவுடமை என்று சொல்வார்கள். அதேபோல் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன? மக்களுக்கு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும். திரைப்படங்களில் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதும், அரசியல் மேடைகளில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல என்று கூறினார்.

மேலும் விஜய்யின் அரசியல் கட்சிக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ’விஜய்க்கு அறிவுரை கூறும் எண்ணம் எனக்கு இல்லை, விஜய் தான் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

 

More News

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி.. ஜோவிகாவை டோட்டலாக மாற்றிய வனிதா..!

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை டோட்டலாக மாற்றி எடுத்த இரண்டு விதமான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இதுதான் எங்கள் முதல் பத்திரிகை.. காதல் மாமாவுடன் திருமண தேதியை அறிவித்த இந்திரஜா..!

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது இந்திரஜா தனது வருங்கால கணவருடன்  சேர்த்து திருமண தேதியை அறிவித்துள்ளார்.

'லால் சலாம்' டிரைலர்.. ரசிகர்களை அதிருப்தி அடைய செய்த அறிவிப்பு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சற்று முன் வெளியான இன்னொரு அறிவிப்பு ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படம் மல்டிஸ்டார் படமா? 2 பிரபலங்கள் இணைந்ததாக தகவல்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 'எஸ்.கே 21'  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'தெறி' இந்தி ரீமேக் டைட்டிலை அறிவித்த அட்லி.. ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான 'தெறி' என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்