திரைப்படங்களில் வசனம் பேசுவதும், மேடையில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல.. விஜய் குறித்து பிரபல இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்படங்களில் வசனம் பேசுவதும், அரசியல் மேடைகளில் பேசுவதும் ஒன்றல்ல என பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் அரசியல் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
நயன்தாரா நடித்த ’அறம்’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் அரசியல் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆரம்பித்த கட்சியின் கொள்கை என்ன? வேலை திட்டம் என்ன? மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொண்டால் அவர்கள் தங்கள் கொள்கையாக பொதுவுடமை என்று சொல்வார்கள். அதேபோல் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன? மக்களுக்கு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும். திரைப்படங்களில் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதும், அரசியல் மேடைகளில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல என்று கூறினார்.
மேலும் விஜய்யின் அரசியல் கட்சிக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ’விஜய்க்கு அறிவுரை கூறும் எண்ணம் எனக்கு இல்லை, விஜய் தான் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout