கேரள வெள்ள நிவாரணத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த நிதி

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதத்திற்காக கமல், ரஜினி உள்பட பல கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் உணவு மற்றும் மருந்து பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.