அஜித், விஜய், மகேஷ்பாபு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Thursday,August 25 2016]

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இளையதலைமுறை இயக்குனர்களுக்கு அவரது அனைத்து படங்களும் ஒரு பாடம். அஜித், விஜய், அமீர்கான், மகேஷ்பாபு, விஜயகாந்த், சூர்யா என பல முன்னணி நடிகர்களை இயக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய், மகேஷ்பாபு, சோனாக்ஷி சின்ஹா குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவை என்ன என்பதை பார்ப்போம்
அஜித்: 'தீனா' படத்திற்கு பின்னர் அஜித்துக்காக ஒரு கதை தயார் செய்து அவரது போன் காலுக்காக காத்திருக்கின்றேன். அந்த கதை அவருக்காக மட்டும்தான். அவர் நாளைக்கே ஷூட் போகலாம்னு சொன்னாக்கூட போகலாம்.
விஜய்: விஜய்யை குழந்தைகள், பெண்கள் என எல்லா குரூப் ஆடியன்ஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக இளம்பெண்கள் அவரை அண்ணன் போல நினைத்து அன்பு வைத்திருப்பது அவருடைய மிகப்பெரிய பலம்.
மகேஷ்பாபு: செம ஸ்டைலிஷ் நடிகர். பிரின்ஸ் என்ற பெயருக்கு ஏற்றவாறு அவர் செம மேன்லி. ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு ஆர்வமா, கவனமா கேட்பார். ஷாட் முடிஞ்சதும் நம்முடைய முகத்தைத்தான் பார்ப்பார். நம்ம முகத்தில் கொஞ்சம் டவுட் இருந்தாலும் 'ஒன்ஸ்மோர் போலாம்'னு அவரே சொல்லிடுவார். அந்த டெடிக்கேஷன்தான் அவரோட பலம்.”
சோனாக்ஷி சின்ஹா: '' 'துப்பாக்கி' இந்தி ரீமேக் 'ஹாலிடே'வுல சோனாக்‌ஷிதான் நாயகி. அப்போ அவங்க நடிச்ச 'லூட்டேரா' படத்தின் டி.வி.டி-யை என்கிட்ட குடுத்து, பார்க்கச் சொன்னாங்க. நிஜமா சொல்றேன், அவங்க நடிப்பு வேற லெவல்! 'இந்த ஹீரோயினை வெச்சு நாம படம் எடுத்தா... அது மூணு சாங், நாலைஞ்சு லவ் சீனோட முடிக்கக் கூடாது'னு தோணுச்சு. 'அகிரா' ஆரம்பிச்சதும் எனக்குத் தோணின முதல் ஆள் சோனாக்‌ஷிதான்.