கமல்ஹாசனின் அடுத்த பட டிரைலர் எப்போது? இயக்குனர் தகவல்.. இன்னும் இத்தனை நாள் இருக்கிறதா?

  • IndiaGlitz, [Saturday,December 30 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் டிரைலர் எப்போது என்ற தகவலை அந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் 93 நாள் இருப்பதாக ரசிகர்கள் கணக்கிட்டு உள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அவர் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’கல்கி 2898’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் நாக் அஸ்வின், ’கல்கி 2898’ திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலர் வெளியாக இன்னும் 93 நாட்கள் இருக்கிறது என்று ரசிகர்கள் கணக்கிட்டு நாட்களை எண்ணிக் கொண்டு வருகின்றனர்

அதற்கு முன்பு ’இந்தியன் 2’ படத்தின் டிரைலர் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து கமல்ஹாசன் படங்களின் டிரைலர்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.