டி ராஜேந்தருக்கு மாரடைப்பு: சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டமா?

  • IndiaGlitz, [Tuesday,May 24 2022]

பிரபல இயக்குனரும் நடிகர் சிம்புவும் தந்தையுமான டி ராஜேந்தர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் டி ராஜேந்தர் அவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியே தெரியாத நிலையில் தற்போது அவர் போரூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது. இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் டி ராஜேந்தர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

67 வயதான டி ராஜேந்தர் அவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது கூட சிம்பு தனது தந்தையின் உடல்நிலை குறைவு குறித்து வெளியே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திடீரென தாய்லாந்து பறந்த பிரபல நடிகை… வைரலாகும் கடற்கரை புகைப்படங்கள்!

கேன்ஸ் சர்வதேத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பிறகு பிரபல நடிகை ஒருவர் தாய்லாந்திற்குச் சென்று தன்னுடைய விடுமுறை

விக்ரம் பிரபு நடிக்கும் உண்மைச்சம்பவம் கதை: டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது .

காணாமல் போன பிரபல பாடகி: 12 நாட்களுக்கு சிதைந்த உடல் மீட்பு!

பிரபல பாடகி ஒருவர் கடந்த 12 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் தற்போது உடல் சிதைந்து அவருடைய பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .

நான் ஒரு கோழை, அம்மா அடிவாங்கும்போது வேடிக்கை பார்த்தேன்: பிரபல நடிகர் பேட்டி

நான் ஒரு கோழை என்றும் எனது அம்மா அடி வாங்கும் போது நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றும் பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து: நடிகை சமந்தா காயம்!

ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .