ஷங்கர் மகளை அடுத்து சினிமாவுக்கு வரும் இன்னொரு பிரபலத்தின் வாரிசு!

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளை அடுத்து இன்னொரு பிரபலத்தின் மகளும் சினிமாவில் நடிக்க வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரிசுகள் நடிக்க வருவது என்பது புதிதல்ல. சிவாஜி கணேசன் முதல் தற்போதைய விஜய்சேதுபதியின் வாரிசு வரை சினிமாவில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி என்பவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சரஸ்வதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே ராஜீவ்மேனன் இயக்கிய ’சர்வம் தாள மயம்’ என்ற திரைப்படத்தில் சரஸ்வதி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கதாநாயகியாக அறிமுகமாகும் சரஸ்வதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.