இயக்குனர் சேரன் வீட்டில் நிகழ்ந்த துக்கம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!
- IndiaGlitz, [Thursday,November 16 2023]
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் வீட்டில் நிகழ்ந்த துக்கத்தை அடுத்து திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சேரன். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சேரன் தந்தை பாண்டியன் என்பவர் அவரது சொந்த கிராமத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. சேரனின் தந்தை பாண்டியன் என்பவர் அவரது சொந்த கிராமம் பழையூர் பட்டி என்ற ஊரில் தியேட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தந்தை மறைவை அடுத்து அவரது இறுதி சடங்கு செய்வதற்கு சேரன் தனது குடும்பத்துடன் பழையூர்பட்டி என்ற அவரது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இன்று மாலை ஐந்து மணிக்கு சேரன் தந்தையின் இறுதி சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேரனின் தந்தை காலமானதை அடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.