விஷாலுக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இயக்குனர் அமீர்

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளிவந்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் திரையுலக பிரமுகர் இயக்குனர் அமீர் என்பது தெரிந்ததே. விஷால் எதற்காக போட்டியிடுகிறார்? அவருக்கு பின்னணியில் யார் இருக்கின்றனர்? என்று கேள்வி எழுப்பிய அமீர், விஷாலை எதிர்த்து நாம் தமிழர் வேட்பாளராக களத்தில் குதிக்கவுள்ளதாகவும் ஆவேசமாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று விஷாலின் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது முதலில் நிராகரிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இந்த ஜனநாயக கேலிக்கூத்தை எதிர்க்கட்சியினர் கண்டித்து வரும் நிலையில் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் அமீர், இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து விஷாலுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, 'ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு, தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது' என்று கூறியுள்ளார்.

More News

தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விலகியது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் இந்த ராஜினா என்று ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

'வேலைக்காரன்' கேரக்டர்களின் பெயர்கள் அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்

ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை : விஷால் வேட்புமனு குறித்து திருமாவளவன்

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் விஷாலின் அதிரடியை பார்த்து ஐம்பது வருட பாரம்பரிய திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடைந்து அவரது வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே

சுயேட்சையை வெற்றி பெற செய்வேன்: விஷால் ஆவேசம்

ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டபோது விஷாலின் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் ஒரு பெரிய டிராமைவையே நடத்தினர்.

மீண்டும் திடுக் திருப்பம்: விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு

ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி முதலில் நிராகரித்தனர். பின்னர் விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த பின்னர் அவரது வேட்புமனு