'கொட்டுக்காளி' திரைப்படத்தை ரிலீஸ் செய்திருக்க கூடாது: இயக்குனர் அமீர்
- IndiaGlitz, [Tuesday,August 27 2024]
சமீபத்தில் வெளியான ’கொட்டுக்காளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கக் கூடாது என்றும் ஓடிடியில் தான் ரிலீஸ் செய்திருக்க வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் இயக்குனர் அமீர் பேசிய போது ’வாழை’ திரைப்படம் கமர்ஷியலுக்கு அருகில் உள்ள திரைப்படம் என்பதால் அந்த படம் திரையரங்குகளில் நல்ல வெற்றி பெற்றது. ஆனால் ’கொட்டுக்காளி’ திரைப்படம் முழுக்க முழுக்க சர்வதேச திரைப்பட விழாவுக்காக உருவாக்கப்பட்டது.
வணிக சினிமாக்களுடன் போட்டி போட இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு இருக்க கூடாது, நான் ’கொட்டுக்காளி’ படத்தை தயாரித்திருந்தால் திரையரங்கில் ரிலீஸ் செய்திருக்க மாட்டேன், சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படத்தை வணிக நோக்கத்தில் திரையரங்குகளில் திணிப்பது அவசியம் அற்றது மற்றும் வன்முறையானது’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இதே இயக்குனர் அமீர் தான், விஜய் சேதுபதி தயாரித்த ’மேற்கு தொடர்ச்சி மலை’ படம் திரையரங்கில் வெளியான போது, திரையரங்கில் இப்படியான படங்களை மட்டும் தான் கொண்டுவர வேண்டும்’ என்று பேசி இருந்தார் என நெட்டிசன்கள் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.