விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவேன்: பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவேன் என்று பிரபல இயக்குனர் ஒருவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இதுவரை எந்த ஒரு திரையுலக பிரபலமும் அவருடைய கட்சியில் இணைந்ததாக தெரியவில்லை.
இருப்பினும் சேலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த மாநாட்டில் சில திரை உலக பிரபலங்கள் அவருடைய கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் என்னை அவர் அழைத்தால் நிச்சயம் அவருடைய கட்சியில் சேருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சியும் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து செயல்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இரு கட்சிகளும் கூட்டணியாக இணைந்தால் அதனுடன் பயணம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி என்றும் சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நன்றாக தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments