இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்ற அமீரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களுக்கு அதிருப்தியானவர்களாக இருந்தாலும் அதில் யார் பெட்டர் என்பதை தேர்வு செய்துதான் ஓட்டு போட வேண்டிய நிலைமை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்றால் நோட்டாவுக்கு போடலாம் என்ற முறை சமீபத்தில்தான் பரவியது
குறிப்பாக இன்றைய அரசியல், அரசியல்வாதிகளை பிடிக்காத பல இளைஞர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து வருவதால் ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கான வாக்கு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் ஒருசில அரசியல் கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது
இந்த நிலையில் நோட்டாவுக்கு வாக்களித்து இளைஞர்கள் தங்கள் வாக்குகளை வீணடிப்பதாகவும், அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்களிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமீரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அரசியல் புரிதலில் இன்றைய இளைஞர்கள் தெளிவாக உள்ளதாகவும், தற்பொழுது தேர்தலில் போட்டிட்ட அனைவரும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானவர்கள் என்பதால் யாரையும் தேர்வு செய்யாமல் இளைஞர்கள் நோட்டாவுக்கு போடுவதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.
ஆனால் நோட்டாவுக்கு இருக்கும் சக்தி இன்னும் அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் முழுமையாக தெரியவில்லை. அதாவது ஒரு தேர்தலில் நோட்டாவுக்கு 35%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தால் அந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் செல்லாது என்று அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி ஆறு மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தும்போது அந்த தேர்தலில் முந்தைய தேர்தலில் போட்டியிட்ட யாரும் போட்டியிட முடியாது.
எனவே இப்போது இல்லையென்றாலும் நிச்சயம் ஒருநாள் நோட்டா, 35%க்கும் அதிக சதவிகித வாக்குகளை பெற்று புரட்சி செய்யத்தான் போகிறது என்பதே இளைஞர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout