விஜய்யை தரக்குறைவாக விமர்சித்தால் திமுகவுக்கு தான் இழப்பு.. அமீர் அட்வைஸ்..!
- IndiaGlitz, [Wednesday,December 18 2024]
திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர்கள் விஜய்யை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றும், அவ்வாறு விமர்சனம் செய்தால் திமுகவுக்கே இழப்பு என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், விரைவில் தீவிர அரசியலில் கலக்க களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் அரசியல் குறித்து திமுகவின் பேச்சாளர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் மோசமாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இதற்கு இயக்குனர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக மூன்றாம் தர பேச்சாளர்களை வைத்து விஜய்யை ஆபாசமாக பேசுவது சரியல்ல. விஜய்யை ஆபாசமாக பேசுவதாலோ, அவரது குடும்பத்தை அவதூறாக பேசுவதாலோ, அவரது தொழிலை இழிவு படுத்தி பேசுவதாலோ, அவரை வீழ்த்திவிட முடியாது. விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் திமுக தனது வாக்குகளை இழக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் ’டங்க்ஸ்டன்’ உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விஜய்யின் கருத்து என்ன? மக்கள் பிரச்சனைகள் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை வைத்து தான் விஜய்யின் அரசியல் குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் பிரச்சனையில் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்துதான், அவரது அரசியல் நிலைமை தீர்மானிக்கப்படும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.