விஜய்யிடம் இரண்டு கதைகள் கூறி காத்திருக்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

'ராம்' மற்றும் 'பருத்திவீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராம், தற்போது தனுஷின் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி 'பேரன்பு கொண்ட பெரியோர்களே' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து இரண்டு கதைகள் கூறியதாகவும், அதில் ஒன்றான 'கண்ணபிரான்' என்ற கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இந்த கதையில் நடிப்பது குறித்து விஜய் விரைவில் முடிவு செய்வார் என்று தான் நம்புவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்னொரு கதை மாஸ் ஹீரோவுக்கு பொருத்தமாக அமையும் சரித்திர கதை என்றும், இந்த இரண்டு கதைகளில் எந்த கதையை விஜய் தேர்வு செய்தாலும் தனக்கு மகிழ்ச்சி என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62; படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் சமயத்தில் விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. அந்த இயக்குனர் அமீரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவு

காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா?

ரோட்டுக்கடையில் ஆம்லேட் போட்ட பிரபல தமிழ் நடிகர்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அட்டகாசமாக தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனவர் நடிகர் அருண்விஜய்.

பூங்கா உரிமையாளரின் கழுத்தை கவ்வி இழுத்து சென்ற சிங்கம்: அதிர்ச்சி தகவல்

தென்னாப்பிரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றின் உரிமையாளரான மைக் ஹோட் என்பவரை அந்த பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று கழுத்தை கவ்வி இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நாயகியின் திருமண தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஜண்ணா' படத்தின் நாயகியும், பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரின் மகளுமான சோனம்கபூரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக கபூர் குடும்பத்தினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வைரலாகும் ரஜினியின் சூப்பர் ஸ்டைல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்பது தெரிந்ததே.