கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியான 'மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்த கட்சியில் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சினேகன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட ஒருசிலரே அவரது கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்தார்
இந்த நிலையில் இன்று கமல் கட்சியில் பிரபல இயக்குனர் அமீர் இணைந்துள்ளார். இவர் இதுவரை சீமானின் 'நாம் தமிழர் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் கட்சியில் இணைந்த பின்னர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தபோது ,'மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது துணை நிற்பேன் என்றும், கடந்த 10 ஆண்டுகளாக சீமானுடன் இணைந்து பணியாற்றியதாகவும், மக்களின் கருத்துக்களை அறியவும், ஆலோசனை வழங்கவும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதாகவும் அமீர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.