ரஜினி அரசியல் குடும்ப அரசியலாகிவிடும்: அமீர் அச்சம்

  • IndiaGlitz, [Saturday,January 06 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதில் இருந்தே அரசியல்வாதிகள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே விஷாலின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் அமீர் தற்போது ரஜினியின் அரசியல் நாளடைவில் குடும்ப அரசியலாக மாறிவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

33 ஆண்டுகள் கூடவே இருந்த சின்னம்மா கட்சியை கைப்பற்றியது போல், ரஜினி முதல்வரானவுடன் அவருடைய வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி அவருடைய மனைவி, மருமகன் ஆகியோர் கட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். ரஜினி முதல்வராவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் அவருடைய குடும்பத்தினர் கட்சியை கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சம் தனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

'பலூன்' தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியுள்ள ஜெய்

சமீபத்தில் வெளியான ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படத்தின் இயக்குனர் சினிஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம், ஜெய் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

முதன்முதலாக இணையும் கமல்-விக்ரம் கூட்டணி

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ்நாயுடு ஆகிய படங்கள் இந்த ஆண்டு அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரன்னிங் டைம்

தானாக சேர்ந்த கூட்டம்' படம் 138.12 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி 18 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகள் ஓடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கு சாம் சி.எஸ். இசையா?

அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிவா, இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பிசியில் உள்ளார்.

பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பேராசிரியர்: காட்டி கொடுத்த சிசிடிவி

உடல்நிலை சரியில்லாத பெற்ற தாயை அவரது மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது.