'தெறி'யின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இயக்குனர் அமீர் அளித்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் மதுரை ஏரியாவின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல இயக்குனர் அமீர் அவர்கள் 'தெறி' படத்தின் வசூல் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திரு.விஜய் அவர்களின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் 'தெறி' திரைப்படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்து கொண்டிருக்கக்கூடைய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் 'தெறி' திரைப்பட விநியோகம் குறித்து என்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில் நான் ஒரு செய்தியை பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.
எனக்கென்று அதிகாரபூர்வமான முகநூல் பக்கமோ அல்லது டுவிட்டர் பக்கமோ நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய பெயரில் உள்ள முகநூல் பக்கமோ அல்லது டுவிட்டர் பக்கமோ என்னுடையது அல்ல. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று இயக்குனர் அமீர் விளக்கமளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout