'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? ரஜினிக்கு அமீர் கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,November 15 2016]

பிரதமர் மோடியின் கருப்புப்பண நடவடிக்கைக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்த ரஜினி அவர்கள் 'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? என்று பிரபல இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர், 'விளம்பரங்கள் மூலம் பிரதமர் ஆனவர் மோடி. தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த், பவன்கல்யாண் போன்ற பெரிய நடிகர்களின் ஆதரவை பெற்று தான் மோடி பிரதமர் ஆனார்.
தன்னுடைய ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே இந்த கருப்புப்பண விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் மோடி. பிரதமரின் இந்த கருப்புப்பண அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், அவர் நடித்த 'கபாலி' படத்தின் கணக்கை காட்ட முடியுமா? ரூ.150 டிக்கெட்டை ரூ.2000 வரை விற்பனை செய்தது நியாயமா? நாட்டில் எத்தனையோ கொடுமை நடந்தபோதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் கருப்பு பண நடவடிக்கைக்கு மட்டும் ரஜினிகாந்த் வாய்திறப்பதன் ரகசியம் என்ன' என்று அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

விஜய்யின் 'பைரவா' படப்பிடிப்பு குறித்த முக்கிய செய்தி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் அவர் நடித்து வந்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.

தர்மதுரை படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் தமிழகத்தில் 75 நாட்களுக்கும்....

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாகவே தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு கருத்துவேறுபாடு...

பணத்தட்டுப்பாடு எதிரொலி: தள்ளி போகும் தமிழ் சினிமாக்களின் ரிலீஸ்

பாரத பிரதமர் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய பொதுஜனம்...

சூர்யாவின் படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா ரசிகர் மன்றம்

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து...