இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் 3 வயது மகனும் ரஜினி ரசிகரா? க்யூட் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மூன்று தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. அவரது வயதை உடையவர்கள், அவர்களுடைய மகன்கள், பேரன்களும் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மூன்று வயது மகன் ’தலைவா’ என ரஜினியை கூறும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.எல். விஜய் தனது மகனுடன் காரில் வரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’ஜெயிலர்’ படம் பார்த்துவிட்டு வரும் நிலையில் ஏ.எல்.விஜய்யின் மகன் 'தலைவா’ என கூறும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இதனை அடுத்து ஏ.எல்.விஜய்யின் மூன்று வயது மகன் கூட ரஜினி ரசிகர் என்பது தெரிய வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன் சாப்டர் 1’ என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி முடித்துள்ளார். அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அலெக்சாண்டர் கேஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.