இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,June 29 2019]

இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபால் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டே வருடங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2016ல் விவாகரத்து மனு விண்ணப்பம் செய்து 2017ல் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்துக்கு பின்னர் தனது முழுகவனத்தையும் இயக்குனர் விஜய் திரைப்படங்களில் செலுத்தி வந்தாலும் அவர் இயக்கிய 'வனமகன்', 'தியா', 'லட்சுமி', 'வாட்ச்மேன்', 'தேவி 2' ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று ஏ.எல்.விஜய் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

விஜய்யை திருமணம் செய்யவிருக்கும் மணப்பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. டாக்டரான இவருக்கும் விஜய்க்கும் வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருதரப்பினர்களும் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

More News

இந்தியாவுக்கு ஆதரவு தர இங்கிலாந்து பறந்த த்ரிஷா-வரலட்சுமி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டியை நேரில் கண்டு ரசிக்க

முடியலைன்னா வீட்டுக்கு போ! பிக்பாஸ் ஓனர் போல் அடாவடி செய்யும் வனிதா!

பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியலைன்னா வீட்டுக்கு போ என மீரா மிதுனை வனிதா பேசியது கொஞ்சம் ஓவராகவே இருப்பதாகவே பார்வையாளர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.

சித்தார்த்தை அடுத்து ஹாலிவுட் படத்தில் அரவிந்தசாமி

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் சிம்பா என்ற சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஹூக் மாட்டிவிட வேற ஆளே கிடைக்கலையா மீரா? நெட்டிசன்கள் கலாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் கடந்த ஒரு வாரமாக பார்த்ததில் வனிதா மற்றும் மீராமிதுன் ஆகிய இருவருமே பிரச்சனைக்குரியவர்களாக தென்படுகின்றனர்.

5ஆம் தேதி திருமணம், 9ஆம் தேதி வரை ஜெயில்: மது ஒழிப்பு போராளி நந்தினியின் நிலை

மது ஒழிப்புக்காக மாணவர் பருவம் முதல் போராட்டம் செய்து வரும் நந்தினிக்கு வரும் ஜூலை 5ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில்