நேற்று அமலாபால் வீட்டில் விசேஷம்.. இன்று ஏ.எல்.விஜய் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலா பாலுக்கு கடந்த 11ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அவர் நேற்று தனது குழந்தையுடன் வீடு திரும்பிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் இந்த விசேஷத்தை கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் வீட்டை அலங்கரித்து அமலாபால் மற்றும் அவரது குழந்தையையும் வரவேற்றனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நேற்று முதல் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அமலாபால் வீட்டில் விசேஷம் இருந்ததை அடுத்து இன்று இயக்குனர் ஏஎல் விஜய் வீட்டில் ஒரு விசேஷம் நடந்து வருகிறது. அதாவது இன்று ஏஎல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் உடன் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மேலும் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நாட்களில் அமலாபால் மற்றும் ஏஎல் விஜய் ஆகிய இருவரது வீட்டில் நடந்த விசேஷம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ’மிஷன் சாப்டர் 1’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருகிறார் என்பதும் விரைவில் அவரது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Happy Birthday to the exceptional Director VIJAY 🎉 Keep us always hooked with your extraordinary storylines. 🎬 May this year bring you lots of success and memorable moments. 🤗🥳#HBDVijay #DirectorVijay pic.twitter.com/58O6a0vOmt
— Lyca Productions (@LycaProductions) June 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments